| Title | Dredd (2012) |
| Director | Pete Travis |
| Cast | Karl Urban Olivia Thirlby Wood Harris Lena Headey |
| Links | WIKI IMDB RT Trailer |
The Dark Knight Rises படம் ப்ரீப்ரொடக்ஷனில் இருக்கும் போது Christopher Nolan, Tom Hardy-க்கு போன்ல இப்படி கேட்டாராம். ‘டாம்… டாம்… உனக்கு ஒரு நல்ல ந்யூஸும், கெட்ட ந்யூஸும் சொல்லப்போறேன். நல்லது வந்து… உனக்கு அட்டகாசமான ஒரு ரோல்… என்னோட அடுத்தப்படத்தில் இருக்கு. ஆனா என்ன பிரச்சனைன்னா… படம் முழுக்க மாஸ்க் போட்டுகிட்டு வரனும். முகம் எந்த சீனிலும் தெரியாது’. அம்மாம் பெரிய டைரக்டரே கேக்கறாரே-ன்னு மண்டையை ஆட்டிய ஹார்டிக்கு பாவம் கடைசியில்… பத்து பதினஞ்சு கிலோ எடை ஏறினது மட்டுமில்லாம, இந்த பழைய ஏ.ஆர். ரஹ்மான் பாட்டிலெல்லாம் கதவு சந்துக்குள் வால் மாட்டிய எலி மாதிரி… ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட்ல பாடுவாங்களே?! அதுமாதிரி ‘கீச்சு கீச்சுன்னு……. சரி விடுங்க. அந்த கருமத்தை ஏன் திரும்ப திரும்ப பேசிகிட்டு!
கிட்டத்தட்ட போன பாராவின் முதல் பாதிதான் Dredd படத்தின் ஹீரோ Karl Urban-க்கும் நடந்தது. படத்தில் ஒரு இடத்தில் கூட இவர் முகம் தெரியாது. படத்தின் ஆரம்பத்தில் மாட்டிய ஹெல்மெட்டை எழுத்து போடும்போதாவது கழட்டுவார்-ன்னு பார்த்தா…. மூச்! இத்தனைக்கும்.. இதுவரை பத்தோடு பதினொன்னா இருந்த கார்ல்-க்கு முதன் முதலாக வரும் ஹீரோ பாத்திரம். ஒருவேளை 1995-ல் நம்ம அண்ணன் Stalone நடிச்சி வந்த Judge Dredd மாதிரி, அப்பப்ப ஹெல்மெட் மாட்டினா போதும்னு நினைச்சாரோ என்னவோ?! ஆனாலும் அண்ணன் ஸ்டலோனோட படத்தை பார்த்த யாராயிருந்தாலும் இன்னொரு முறை.. Judge Dredd காமிக்கை மறுபடியும் ஒரு படமா எடுக்கவோ, அதில் நடிக்கவோ செம தில் இருந்திருக்கும்.
ஆனா 1995 படத்துக்கும், இதுக்கும் 200 அடுக்கு மாடி உயரத்துக்கு வித்தியாசம். படம் சும்மா…. கெத்து போங்க!! செம ஸ்டைலிங்கான மேக்கிங். இப்படியொரு திருப்தியான, அல்ட்ரா வயலன்டான ஒரு சூப்பர் ஹீரோ படம் கடைசியா பார்த்தது Kick-Ass தான். அதுக்கு முன்னாடி வந்த Watchmen -க்கு நான் ஸ்டலோனோட படத்தையே இன்னொரு தபா பார்த்திடுவேன்.
இந்த காமிக்கை பத்தி தெரியாதவங்களுக்கு ஜட்ஜ் ட்ரெட் பத்தி ஒரு சின்ன இன்ட்ரொ: அண்ணன் ஸ்டலோன் மாதிரி வாயை வச்சிகிட்டு, அடித்தொண்டையிலிருந்து “I’m the LAW” -ன்னு சொல்லிப்பாருங்களேன்… அதுதான் ட்ரெட்! 3-வது மில்லேனியத்தில் அமெரிக்கா முழுக்க ரேடியேஷன் வேஸ்ட் லேண்டாகியிருக்கும் போது, மெகா சிட்டியில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் ஒரு போலீஸ் குழுவின் ஸ்ட்ரீட் ஹீரோ… ட்ரெட். மற்ற இண்டெப்த் மேட்டரெல்லாம் கருந்தேளோ அல்லது கனவுகளின் காதலனோ எழுத வேண்டிய ஏரியா.
1995-க்கும் 2010-க்கும் கதையில் எந்த ஒற்றுமையும் கிடையாது. இதில் ஒரு புதுசாக வேலைக்கு வரும் ஒரு ரூக்கி-க்கு ட்ரெய்னிங் கொடுக்க, ட்ரெட்.. அந்த ட்ரெய்னியையே ‘எதாவது ஒரு க்ரைம் ஸ்பாட்டை’ தேர்ந்தெடுக்கச் சொல்கிறார். ரூக்கி ‘ஆண்டர்ஸன்’-க்கு ஒரு ஸ்பெஷல் சக்தி உண்டு: சைக்கிக். அவள் தேர்ந்தெடுக்கும் ‘Peach Trees’ என்னும் 200 மாடி கட்டிடம்தான், வில்லன் மா-மா’வின் (இது நேத்து சொன்ன மாமாயில்லை; லேடி Ma-Ma) ஏரியா. Slo-Mo என்னும் போதைப்பொருளுக்கு மெகா சிட்டி முழுக்க இவர்தான் ப்ரொடக்ஷன்/டிஸ்ட்ரிபியூஷனெல்லாம். இவரோட ஆள் ஒருத்தரை ஜட்ஜ்கள் கைது செய்து கொண்டு போகும்போது, அந்த 200 மாடி கட்டிடத்தையும் லாக்-அவுட் செய்யும் மா-மாவுக்கும், ட்ரெட்டுக்கும் நடக்கும் டமால்-டுமீல்தான் மிச்சமெல்லாம்.
Execution is all about. ஒரு சூப்பர் ஹீரோ படத்தை “R” ரேட்டிங்கில் எடுப்பதுன்னு முடிவு செய்த பின், Dredd goes all the way to the edge of “R”. ரசித்து செதுக்கப்பட்ட வன்முறை காட்சிகள்-னு (க்வெண்டின்/ரோர்டிகோஸ் போல) சொல்லலாம்; நம்ம சென்சார் போர்டை வச்சிகிட்டே.. பாக்யராஜ் படம் காட்டுவாரே?! அது மாதிரி (NC-17 ரேட்டிங்கிற்கு எத்தனை வயலன்ஸ் தேவைப்படும்-னு யாருக்காவது தெரியனும்னா, Killer Joe பார்க்கவும். காதலன் வேறு மொழியில் எழுதின மாதிரிதான் தெரியும். நம்புங்க அது தமிழ்தான்).
நேத்து 3டி’ படங்களை பத்தி எழுதினப்ப கூட, காமெண்ட் பாக்ஸில் Hugo, Brave படங்களையெல்லாம் கேட்டிருந்தாங்க. நான் சொல்ல வந்தது அந்த டெக்னாலஜி படத்திற்கு எப்படி உபயோகப்பட்டது-ங்கறதை. அந்த வகையில் Hugo டெக்னிகலி அட்டகாசமான படம். ஆனால் அதை 3டியில் பார்க்க எந்த தேவையும் இல்லை. அடுத்து இன்னொரு விசயம், இப்ப 3டி-ன்னு சொல்லிட்டு வரும் 99% படங்கள் 2டி-யில் எடுத்து, கல்லா கட்ட 3டி-யாக மாற்றிய படங்கள். ட்ரெட் அப்படியில்லை. ரெட் கேமிராவில் முழு படமும், இதன் Slo-Mo காட்சிகள் Phantom High Speed Camera-விலும் எடுத்திருப்பாங்க. OMG, இந்த Slo-Mo ஷாட்கள்… கவிதை! ‘டெப்த்’ இல்லாத 3டி படங்களை பார்த்து என்னை மாதிரியே நீங்களும் வெறுத்துப் போயிருந்தால், ட்ரெட் படத்தை 3டி-யில் பாருங்க. Worth every penny.
என்ன பிரச்சனைன்னா…, படம் டெக்னிகல்/விஷுவன்னு அசத்தலாக இருந்தாலும், பாக்ஸாஃபில் படுத்துக்கும் போல. ஆகஸ்ட் கடைசி வாரத்திலிருந்து அக்டோபர் வரையில் எந்தப்படம் வந்தாலும் பைசா தேற்றுவது கொஞ்சம் கஷ்டம் (ஸ்கூல் ஆரம்பிச்சிடும்). கூடவே, கொலராடோ துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு, இதுமாதிரியான ‘எக்ஸ்ப்ளோஸிவ்’ ஆக்ஷன் படங்களை தியேட்டரில் பார்க்க மக்களுக்கு பயம் வேறு (தியேட்டரில் யாராவது எந்திரிச்சாலே, எங்க சுடுவானோ-ன்னு பயந்துகிட்டே படம் பார்க்க வேண்டியிருக்கு). The Expendables 2 படம் கூட பாக்ஸாஃபீஸில் திணறியதுக்கு காரணம் இதுதான். ஆனால் அமெரிக்காவில் 50 மில்லியன் வந்தாலாவது அடுத்தப்படத்தை எடுக்கலாம்னு இருக்கோம்’-ன்னு சொல்லியிருக்காங்க. எதுக்கும் நீங்க இந்தப் படத்தையே பார்த்து வச்சிக்கங்க. 2-வது படம் வர்றது டவுட்தான்.
Dredd = Judged